அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update:2025-06-06 16:43 IST

 

மும்பை.

வார இறுதி நாளான இன்று (6.6.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை அதிரடியாக உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.

அதன்படி, 252 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 3 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 817 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 578 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

461 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 848 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 746 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 82 ஆயிரத்து 188 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

194 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 146 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 782 புளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 556 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்