கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துளனர்.;
மும்பை,
சர்வதேச பங்குச்சந்தைகளின் நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, 174 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 826 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 219 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 352 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
171 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 420 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 624 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 551 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 379 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 755 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 35 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 618 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துளனர்.