போர் பதற்றம் எதிரொலி; சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை
நிப்டி 260 புள்ளிகள் குறைந்து 24,853 ஆக இருந்தது.;
மும்பை,
ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவிற்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக இன்று பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு 870 புள்ளிகள் அல்லது 1.06 சதவீதம் குறைந்து 81,539 ஆகவும், நிப்டி 260 புள்ளிகள் அல்லது 1.03 சதவீதம் குறைந்து 24,853 ஆகவும் இருந்தது. நிஃப்டி மிட்கேப் மற்றும் நிப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.65 சதவீதம் மற்றும் 0.59 சதவீதம் சரிந்துள்ளன.