எஸ்பிஐ வங்கியில் வேலை.. மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்! யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த காலி பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம்.;

Update:2025-09-19 08:50 IST

நாட்டின் முன்னாணி பொதுத்துறை வங்கியாக உள்ள எஸ்பிஐ வங்கியில் காலியாக 59 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்:

மேலாளர் ( புராடெக்ட்ஸ்- டிஜிட்டல் தளங்கள்) - 34

துணை மேலாளர் (புராடெக்ட்ஸ்- டிஜிட்டல் தளங்கள்) - 25

கல்வி தகுதி: பிஇ/பிடெக் அல்லது எம்.சி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.

வயது வரம்பு: 02.10.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 28 வயதும் அதிகபட்சம் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். துணை மேலாளர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.

சம்பளம்: ரூ.85,920 முதல் 1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruitment.bank.sbi/crpd-sco-2025-26-10/apply

Tags:    

மேலும் செய்திகள்