மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.) நிறுவனத்தில் காலியாக 160 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2025-09-20 14:18 IST

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.) நிறுவனத்தில் காலியாக 160 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.)

காலி பணிகள்: 160 (ஒப்பந்த அடிப்படை)

பதவி: டெக்னிக்கல் ஆபீசர் - சி

பணி இடம்: ஐதராபாத்

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பி.இ., பி.டெக். படிப்புகள். ஒரு ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது: 31-8-2025 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: ஷார்ட்லிஸ்ட், நேர்காணல், ஆவண சரிபார்ப்பு

தேர்வுமையம் (தமிழ்நாடு): சென்னை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2025

இணையதள முகவரி: https://www.ecil.co.in/jobs.html

Tags:    

மேலும் செய்திகள்