தமிழக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி: உடனே விண்ணப்பிங்க

கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது.;

Update:2025-12-08 12:11 IST

சென்னை,

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்கள் வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பின்படி, இப்பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி)

காலி பணி இடங்கள்: 2,147

பதவி: துணை செவிலியர் / கிராம சுகாதார செவிலியர் பதவிகள்

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்படும் இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (எம்.பி.எச்.டபிள்யூ-பெண்) பயிற்சிப் படிப்பு, துணை செவிலியர் மருத்துவச்சி (ஏ.என்.எம்.) பயிற்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-12-2025

இணையதள முகவரி: https://www.mrb.tn.gov.in/notifications.html

Tags:    

மேலும் செய்திகள்