ரெயில்வேயில் வேலை: 434 காலி பணியிடங்கள்.. அருமையான வாய்ப்பு
ரெயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
சென்னை,
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ள ரெயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் வருமாறு
பணி நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி)
காலி இடங்கள்: பதவி: பாரா மெடிக்கல் (நர்சிங் கண்காணிப்பாளர், டயாலிசிஸ் டெக்னீஷியன், ஹெல்த் & மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேடு 3, பார்மசிஸ்ட், ரேடியோகிராபர் எக்ஸ்-ரே டெக்னீஷியன், இ.சி.ஜி. டெக்னீஷியன், லேபோரேட்டரி அசிஸ்டெண்ட் கிரேடு 2 உள்ளிட்ட பதவிகள்
கல்வி தகுதி: பதவியின் தன்மைக்கேற்ப டி.பார்ம், டி.எம்.எல்.டி., டி.ஜி.என்.எம்./பி.எஸ்சி நர்சிங், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மருத்துவ டிப்ளமோ படிப்புகள்
வயது: 8-9-2025 அன்றைய தேதிப்படி, 18 முதல் 36 வயது, 19 முதல் 36 வயது, 20-38 வயது, 20-36 வயது, 20-43 வயது என பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-9-2025
இணையதள முகவரி: https://www.rrbchennai.gov.in/