பிறந்தநாளுக்கு கேக் வெட்ட அழைத்த நண்பன்.. நம்பி சென்ற 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
கேக் வெட்டுவதாக 17 வயது சிறுமியை வாலிபர் வனப்பகுதிக்கு அழைத்துச்சென்றார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் யதீஷ்(வயது 26). இவரும், அந்த பகுதியில் வசித்து வரும் ஒரு 17 வயது சிறுமியும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு பிறந்தநாள் என்று தெரிகிறது. இதனை அறிந்த யதீஷ் சிறுமியின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதாக கூறி, ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் அங்கு வைத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பின்பு யதீஷ் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், யதீஷ் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.