ஓடும் பஸ்சில் தம்பதியிடம் 15 பவுன் நகை அபேஸ்

ஓடும் பஸ்சில் தம்பதி யிடம் 15 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-13 16:46 GMT

புதுச்சேரி

ஓடும் பஸ்சில் தம்பதி யிடம் 15 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

15 பவுன் நகை அபேஸ்

புதுவை தர்மாபுரி கலை மகள் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று மாணிக்கமும், அவரது மனைவியும் சென்னையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு புதுவை ராஜீவ்காந்தி சதுக்கத்தில் இருந்து பஸ்சில் ஏறினர். அப்போது அவர்கள் தங்களது கைப்பையில் 15 பவுன் நகையை வைத்திருந்தனர். இதற்கிடையே லாஸ்பேட்டை பஸ் நிறுத்தத்தில் 2 பெண்கள் கைக்குழந்தை யுடன் பஸ்சில் ஏறினர். அவர்கள் மாணிக்கம், அவரது மனைவி அமர்ந்திருந்த இருக்கையின் அருகே நின்று கொண்டு பயணம் செய்தனர். அப்போது அந்த பெண்கள் திடீரென சில்லரையை பஸ்சில் சிதற விட்டனர். கீழே விழுந்த சில்லைரகளை தம்பதியினர் எடுத்து அந்த பெண் களிடம் கொடுத்தனர். அடுத்த பஸ் நிறுத்தத்தில் 2 பெண்களும் கீழே இறங்கி விட்டனர்.

2 பெண்களுக்கு வலைவீச்சு

இதற்கிடையே சென்னையில் மகள் வீட்டுக்கு சென்று தம்பதியினர் பையை சோதனை செய்தனர். அப்போது பையில் வைத்திருந்த 15 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சில் கைக்குழந்தையுடன் பயணம் செய்த 2 பெண்கள் சில்லைரகளை சிதறவிட்டு கவனத்தை திசைதிருப்பி நகையை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் மாணிக்கம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை அபேஸ் செய்த 2 பெண் களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்