காலிமனைகளை பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை

புதுவையில் காலிமனைகளை பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-07-05 17:18 GMT

புதுச்சேரி

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலிமனைகள் அதன் உரிமையாளர்களால் முறையாக பராமரிக்கப்படாததால் புதர்மண்டி விஷப்பூச்சிகள் மற்றும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உருவாகி அருகில் வசிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் காலிமனைகளின் உரிமையாளர்கள் பொதுமக்களின் சுகாதார நலன்கருதி தங்களின் காலிமனைகளை சுத்தம் செய்து தண்ணீர் தேங்காமல் பாதுகாக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் காலிமனைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்குமாறும், மேலும் காலிமனைகளை சரியாக பராமரிக்காதவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி விவரம் தெரிந்தால் நகராட்சிக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மனைகளை பராமரிக்காதவர்கள் மீது துணைக்கோட்ட நடுவர் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மனைகளின் வழிகாட்டு மதிப்பை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்