பொதுஇடத்தில் ரகளை செய்தவர் கைது
கோட்டுச்சேரி அருகே பொதுஇடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
கோட்டுச்சேரி
நிரவி போலீசார் கருக்காலச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்பிடி துறைமுக சாலையில் வடக்கு வாஞ்சூர் சுனாமி நகரை சேர்ந்த சந்துரு (வயது 37) என்பவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.