மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் விழிப்புணர்வு பிரசாரம்

புதுவையில் ரத்ததானத்தை வலியுறுத்தி மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.;

Update:2023-07-01 23:44 IST

புதுச்சேரி

மேற்கு வங்காள மாநிலம் கூப்ளி மாவட்டத்தை சேர்ந்த ஜெயதேவ் ராவத். இவர் ரத்ததானத்தை வலியுறுத்தி சைக்கிளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந்தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார்.

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினார். அவரது பயணம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் செல்வம் அவரை வழியனுப்பி வைத்தார். ஜெயதேவ் ராவத் சைக்கிளில் சென்று தமிழக பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்