ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுவையி்ல் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை இயக்கக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
புதுச்சேரி
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் மூலம் நவீன பஸ்களை இயக்க வேண்டும், பழுதடைந்த பஸ்களை மாற்றிவிட்டு தொலைதூரங்களுக்கு புதிய பஸ்களை இயக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச குழு சார்பில் இன்று காலைசாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி) அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரஞ்சித், மாகி செயலாளர் தனிலேஷ், பள்ளூர் செயலாளர் ரோஷித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சனிஷ், ஆனந்த், நிரஜ், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.