சட்டசபையில் விநாயகர் சதுர்த்தி விழா
சட்டசபையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.;
புதுச்சேரி
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி தங்கள் வீட்டில் வைத்து வழிபட்டனர். இதேபோல் நகரமெங்கிலும் கோவில்கள், ஆட்டோ ஸ்டாண்டுகள், பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது.
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. மற்றும் முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.