250 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

சதுர்த்தி விழாவிற்காக 250 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-08-13 23:59 IST

புதுச்சேரி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை புதுவையில் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக இந்து முன்னணி ஆலோசனை கூட்டம் இன்று காலை வெங்கட்டாநகரில் உள்ள செந்தில் மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு விநாயகர் சதுர்த்தி பேரவை தலைவர் குமரகுரு தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர்கள் மணிவண்ணன், ஸ்ரீதர், பொதுச்செயலாளர் சனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுத்தி விழாவையொட்டி புதுவை, காரைக்காலில் 250 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும். விழாவில் கலந்து கொள்ள கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் அன்றைய தினம் அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்