புதுப்பெண் மாயம்
கரயைாம்புத்தூரில் புதுப்பெண் மாயனாத்தால் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.;
பாகூர்
பாகூர் அடுத்த கரையாம்புத்தூரை சேர்ந்தவர் பாரதி (வயது 30). பெயிண்டர். இவருக்கும் பண்ருட்டி மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த அபிநயா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின் அபிநயா, கணவர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2-ந் தேதி இரவு கணவன், மனைவியும் தூங்கச்சென்றனர். மறுநாள் காலையில் பாரதி எழுந்து பார்த்தபோது, மனைவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதி மற்றும் அவரது குடும்பத்தினர், பல்வேறுஇடங்களில் தேடிப்பார்த்தும் அபிநயா பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இது குறித்து கரையாம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் பாரதி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அபிநயா திருமணம் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறினாரா? அல்லது அவரை யாரேனும் கடத்திச் சென்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி, அவரை தேடி வருகின்றனர்.