நீண்ட வரிசையில் நின்று வணங்கிய அரசு ஊழியர்கள்

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை அரசு ஊழியர்கள் நீண்ட வரிசையில் நின்று வணங்கிணார்கள்.

Update: 2023-06-15 17:19 GMT

புதுச்சேரி

புதுவை அரசுத்துறைகளில் 625 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் மேல்நிலை எழுத்தர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள், அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உதவியாளர் பணியிடங்களை மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதேபோல் அமைச்சக ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடமும் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூற சட்டசபைக்கு வந்தனர். சட்டசபைக்கு வெளியே முதல்-அமைச்சரின் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது காரில் சட்டசபைக்கு வந்தார்.

அங்கு காத்திருந்த அமைச்சக ஊழியர்கள் மனித சங்கிலி போன்று நீண்ட வரிசையில் நின்று கைகூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்