காரைக்காலில் கொட்டி தீர்த்த கனமழை
காரைக்காலில் பகல் 12 மணிக்கு ஒரு மணி நேரம் காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.;
காரைக்கால்
காரைக்காலில் நேற்று முதல் லேசான மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது. தொடர்ந்து இரவு லேசான மழை பெய்தது. தொடர்ந்து இன்று அதிகாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பின்னர் 12 மணிக்கு ஒரு மணி நேரம் காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
இதன்காரணமாக காரைக்கால் பிரதான வீதிகளான பாரதியார் வீதி, திருநள்ளாறு வீதி, காமராஜர் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.