கத்தியுடன் திரிந்த ரவுடி கைது

புதுவை குரும்பாம்பேட் பகுதியில் கையில் கத்தியுடன் திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update:2023-04-25 22:33 IST

மூலக்குளம்

புதுவை மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் குரும்பாம்பேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி முத்துகுமார் என்கிற முத்து (வயது 28) கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்