முத்தாலவாழி அம்மன் கோவில் செடல் விழா

உளவாய்க்கால் கிராமத்தில் உள்ள முத்தாலவாழி மாரியம்மன் கோவிலில் செடல் விழா நடந்தது.;

Update:2023-08-08 22:05 IST

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உளவாய்க்கால் கிராமத்தில் முத்தாலவாழி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் இன்று காலை 10 மணி அளவில் கரகம் ஜோடிக்கப்பட்டு வீதி உலா வந்தது. தொடர்ந்து பொதுமக்கள் கூழ் கலசங்களை ஊர்வலமாக எடுத்துவந்து அம்மனுக்கு படையலிட்டு சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் செடல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு செடல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் அமைச்சர் சாய்.சரவணன்குமார் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இரவு 7 மணிக்கு சாமி வீதியுலா நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்