வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பு

பாகூர் கமலா நேரு திருமண மண்டபத்திற்கு ரூ.7 லட்சத்து 50 லட்சம் செலவில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது.;

Update:2023-04-27 22:01 IST

பாகூர்

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து கீழ் செயல்படும் பாகூர் கமலா நேரு திருமண மண்டபத்திற்கு நீண்ட நாட்களாக வாகனம் நிறுத்துமிடம் இல்லாமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து பாகூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 50 லட்சம் செலவில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாகன நிறுத்துமிடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் புனிதவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்