புட்லாய் அம்மன் கோவிலில் செடல் உற்சவம்
தவளக்குப்பம் அருகே புட்லாய் அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது.;
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அருகே தானம்பாளையத்தில் பழமையான புட்லாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத செடல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இரவு 8 மணி அளவில் அம்மனுக்கு பட்டாபிஷேகமும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் புட்லாய் அம்மன், விநாயகர், முருகர் வீதியுலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.