திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.;

Update:2025-11-28 21:56 IST

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் திருக்கார்த்திகை தினத்தின்போது கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தர்கா, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் மற்றும் அரசு தரப்பின் வாதங்களை நீதிபதி கேட்டறிந்தார்.

கோவில் நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக அழைப்பிதழ் அச்சடித்து விநியோகம் செய்ததாக கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், உரிமையியல் வழக்காக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தர்கா நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்