ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; 3 கி.மீ தொலைவிற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பெருங்களத்தூரில் வாகனங்கள் பழுதாகி நின்றதால் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாக ஜிஎஸ்டி சாலை உள்ளது. எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த சாலையில் இன்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரி பழுதாகி நின்ற நிலையில், பாலத்தின் கீழ் மினி வேன் பழுதாகி நின்றது.
இதனால், ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது. 3 கி.மீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக, அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பயணிகள், வெளியூர்களுக்கு புறப்பட்ட பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.