சர்வதேச யோகா தினம்: நோயற்ற பாரதம் உருவாக வழிவகுப்போம் - நயினார் நாகேந்திரன்
11-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
ஐ.நா சபையில் கடந்த 2014-ம் ஆண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறினார். அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என அப்போது அவர் பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன. இதனை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.
இந்நிலையில் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில், சர்வதேச யோகத்தை தினத்தை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
பல்வேறு எண்ணங்களின் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் மனதை ஆற்றுப்படுத்தி, போதிய ஓய்வின்றி அயர்ந்திருக்கும் உடலை வலுப்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆயுளை நீட்டிக்கும் அருமருந்தான யோகா உலகுக்கு நம் பாரதம் அளித்த கொடை. சர்வதேச யோகா தினமான இன்று, நாமும் யோகா பயிற்சியில் ஈடுபடுவோம், நோயற்ற பாரதம் உருவாக வழிவகுப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.