தூத்துக்குடியில் பீச் ரோட்டில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை:‍ பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடியில் பீச் ரோட்டில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் சாலையின் நடுவில் டிவைடர்கள் இல்லாததாலும் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.;

Update:2025-11-21 00:43 IST

தூத்துக்குடி ரோச் பார்க் துறைமுகம் சாலை துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அதிகாலை மற்றும் மாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும், விளையாட்டு பயிற்சிக்காகவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்கள் அதிகாலை டியூட்டி முடிந்த பின்னர் ரிலாக்ஸ் செய்வதற்காக பீச் ரோட்டில் காரில் சென்றுவிட்டு பின்னர் விடுதிக்கு செல்வது வழக்கம். அதுபோல் அன்றைய தினம் காலையில் சென்றபோது அந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணம், அந்த சாலையில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் சாலையின் நடுவில் டிவைடர்கள் இல்லாததும் என்று தெரியவந்துள்ளது. இருபுறமும் வாகனங்கள் வரும்போது சாலையின் நடுவில் டிவைடர்கள் இல்லாததால் எதிரே வேகமாக வாகனங்கள் வரும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது.

Advertising
Advertising

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் துறைமுக நிர்வாகம் இணைந்து கடற்ரை சாலையில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் தொடங்கி தெர்மல்நகர் சந்திப்பு வரை சாலையின் நடுவில் கான்கிரீட் டிவைடர்கள் அமைத்து மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து வாகனத்தை நிறுத்தி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்