ராமநாதபுரம்: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தீயிலிட்டு அழிப்பு

120 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 951 கிலோ கஞ்சா மூட்டைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டது.;

Update:2025-11-21 01:18 IST

ராமநாதபுரம்,

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அதனை மொத்தமாக தீயிலிட்டு அழித்து வருகின்றனர்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 120 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 951 கிலோ கஞ்சா மூட்டைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டது. எனவே அவற்றை நாங்குநேரியை அடுத்த பொத்தையடி தனியார் நிறுவனத்துக்கு கொண்டு வந்து தீயிலிட்டு அழித்தனர்.

போலீஸ் டி.ஐ.ஜி. மூர்த்தி, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்