‘எதிரிகள் பலமாக இருப்பது போல் தெரியும், ஆனால்...’ - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.;
சென்னை,
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் வரப்போகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று இரண்டாவது முறை முதல்-அமைச்சராக பதவியேற்க வேண்டும்.
எதிரிகள் கொஞ்சம் பலமாக இருப்பது போல் தெரியும், ஆனால் அது பலம் இல்லை. பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது. கழக தொண்டர்கள் பிரமாதமாக செயல்படுவதற்கு தயாராக இருக்கிறார்கள். நமது வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். எதிர்வரும் தேர்தலில் எதிரிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.