இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025

Update:2025-05-30 09:11 IST
Live Updates - Page 5
2025-05-30 03:44 GMT

தவெக சார்பில் கல்வி விருது விழா.. தேங்காய் உடைத்து ஆரம்பித்து வைத்த புஸ்ஸி ஆனந்த்

10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை கவுரவிக்கிறார் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய். மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இந்த கல்வி விருது விழாவில், இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

2025-05-30 03:44 GMT

குற்றாலம் அருவிகளில் குளிக்க 6ஆவது நாளாக தடை

தொடர்ந்து பெய்த மழையால், தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறையவில்லை. இன்று ஆறாவது நாளாக அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

2025-05-30 03:44 GMT

நிர்வாகிகளுடன் அன்புமணி 3 நாட்களுக்கு ஆலோசனை

பாமகவில் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் இன்று முதல் 3 நாட்களுக்கு அன்புமணி சந்திக்கிறார். மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. மாவட்ட வாரியாக உள்ள முக்கிய நிர்வாகிகளை அன்புமணி சந்தித்து ஆலோசனை செய்யவிருக்கிறார்.

2025-05-30 03:43 GMT

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம். திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்