தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி வகுப்பு

தூத்துக்குடியில் குற்ற சம்பவ இடத்தை E-Shaksha எனும் செயலியில் பதிவேற்றுவது குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.;

Update:2025-11-22 00:20 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதிக்கு சென்று சம்பவ இடத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு ஆகியவற்றை நேரடியாக E-Shaksha எனும் செயலியில் பதிவேற்றம் செய்யும் முறைகள் குறித்தும், அதேபோன்று நீதிமன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்படும் அழைப்பானைகளை (summon) E-Summon எனும் செயலி மூலம் சம்பந்தப்பட்டவருக்கு சார்பு செய்து பின்னர் நீதிமன்றத்திற்கு அனுப்பும் முறைகள் குறித்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் தூத்துக்குடி போலீஸ் ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி பயிற்சி டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் மாநில குற்ற ஆவண காப்பகம் தென்மண்டல போலீஸ் இன்ஸ்பெக்டர் வெர்ஜின் சாவியோ ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்