வட சென்னையில் புதிய துணை மின்நிலையம்: உதயநிதி திறந்து வைத்தார்

 சீரான மின் விநியோகத்தை இந்த துணை மின் நிலையம் உறுதி செய்யும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-28 22:04 IST

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வட சென்னை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ், சென்னை பிராட்வே டேவிட்சன் சாலையில் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சார்பில் ரூ.18.24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை இன்று நாம் திறந்து வைத்தோம். பிராட்வே பகுதியைச் சுற்றியுள்ள 15,000க்கும் அதிகமான வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சீரான மின் விநியோகத்தை இந்த துணை மின் நிலையம் உறுதி செய்யும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்