தமிழகத்தின் 13 இடங்களில் சதமடித்த வெயில்

குறிப்பாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.;

Update:2025-07-11 19:31 IST

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வரும் அதே வேளையில், ஒருசில இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பக்காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 13 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் தாண்டி பதிவான இடங்கள் விபரம்;

1. நுங்கம்பாக்கம் - 100.4

2. மீனம்பாக்கம் - 102.74

3. ஈரோடு - 101.48

4. கரூர் பரமத்தி - 100.4

5. மதுரை நகரம் - 104

6. மதுரை விமான நிலையம் - 106.16

7. நாகபட்டினம் - 102.92

8. பாளையங்கோட்டை - 100.4

9. தஞ்சாவூர் - 100.4

10. திரிச்சிராப்பள்ளி - 101.66

11. திருத்தணி - 100.76

12. தூத்துக்குடி - 101.3

13. வேலூர் - 104

Tags:    

மேலும் செய்திகள்