வங்கக்கடலில் 21-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது;
சென்னை,
கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும். அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது எனலாம். ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த நாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கனமழை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.