அதிகாலையிலேயே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.;

Update:2025-08-22 05:53 IST

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மெரினா உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்