11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.;
சென்னை,
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்றிரவு கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, சேலம், நீலகிரி, தேனி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.