ஒரே நாளில் ஆங்கில கால்வாயை கடந்த 1,072 அகதிகள்
ஒரே நாளில் ஆங்கில கால்வாயை 1,072 அகதிகள் கடந்துள்ளனர்.;
லண்டன்,
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைகின்றனர். இதனை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கத்துடன் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி இங்கிலாந்தில் சட்ட விரோதமாக நுழையும் எவரையும் கைது செய்து 2 வாரங்களுக்குள் திருப்பி அனுப்பலாம்.
இந்தநிலையில் ஆங்கில கால்வாயை ஒரே நாளில் 1,072 அகதிகள் சட்ட விரோதமாக கடந்தனர். இதன்மூலம் இந்த ஆண்டில் ஆங்கில கால்வாயை கடந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 103 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் எரித்திரியா, ஈரானைச் சேர்ந்த சிலர் ஒப்பந்தப்படி உடனடியாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.