பெரு நாட்டில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு

ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டு இருந்த 2 படகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.;

Update:2025-12-03 07:45 IST

லிமா,

தென் அமெரிக்க நாடான பெருவின் உகாயாலி நகரில் உள்ள அமேசான் ஆற்றங்கரையில் படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டு இருந்த 2 படகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

பின்னர் அந்த இரு படகுகளும் கவிழ்ந்து அதில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள் குழந்தைகள் உள்பட 12 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 25 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்