டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்துச்சீட்டைக் கூட 'குரோக்' படிக்கும்: எலான் மஸ்க்

ஐடி, சினிமா, மருத்துவம் என பல முன்னணித் துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.;

Update:2025-07-29 07:42 IST

representation image (Meta AI)

வாஷிங்டன்,

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஐடி, சினிமா, மருத்துவம் எனப் பல முன்னணித் துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, பலரையும் வேலை இழப்புக்கு உள்ளாக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவை எடுத்துக்கொண்டால், யாரும் நடிக்காமல் ஒரு திரைப்படத்தையே எடுத்து முடிக்கும் அளவுக்கு ஏஐ ஆதிக்கம் செலுத்துகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, எக்ஸ் தளத்தின் குரோக், கூகுளின் ஜெமினி போன்றவை மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஏஐகளாக உள்ளன. இந்த ஏஐ மூலம் தேடப்படும் தகவல்கள் சில வினாடிகளில் மொத்தமாகக் கிடைத்து விடுவது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஏஐ -க்கள் குறித்து பலரும் தங்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், குரோக் ஏஐ-யின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெட்சூ என்ற பயனர், ஒரு மலையேற்றத்தின்போது குரோக் 4 கேமராவில் அங்குள்ள தாவரங்களைக் காட்டி, அவற்றின் பெயரைக் கூறுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு குரோக் உடனடியாகப் பதிலளித்துவிட்டது. சிலவற்றை யூகங்களின் அடிப்படையில் பதிலளித்துள்ளது. இதைக் கண்டு வியந்து போன அவர், தனது எக்ஸ் தளத்தில் இதைப் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: "உங்கள் கேமராவை எதை நோக்கி வேண்டுமானாலும் காட்டுங்கள். அது என்ன என்பதை குரோக் சொல்லிவிடும். எனது டாக்டரின் மருந்துச்சீட்டில் உள்ள எழுத்தைக் கூட அது படித்துவிடக்கூடும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்