எஸ்டோனியா நாட்டில் அத்துமீறி நுழைந்த ரஷிய போர் விமானங்கள்
பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.;
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ரஷிய டிரோன்கள் போலந்து, ருமேனியா ஆகிய நாடுகளில் ஊடுவருவியதாக குற்றம் சாட்டப்பட்டது. ரஷிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து தெரிவித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷிய மறுத்தது. இந்த நிலையில் 3 ரஷிய போர் விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளிக்குள் அத்துமீறியதாக எஸ்டோனியா நாடு தெரிவித்து உள்ளது.
தலைநகர் தாலினில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைண்ட்லூ தீவுப் பகுதியில், 3 ரஷிய மிக்-31 போர் விமானங்கள் அனுமதியின்றி எஸ்டோனிய வான்வெளிக்குள் நுழைந்து மொத்தம் 12 நிமிடங்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி மார்கஸ் கூறும்போது, “இந்த ஆண்டு ஏற்கனவே ரஷியா எஸ்டோனிய வான்வெளியை நான்கு முறை அத்துமீறியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது,ஆனால் 3 போர் விமானங்கள் எங்களது வான்வெளிக்குள் நுழைந்து அத்துமீறயது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெட்கக்கேடானது” என்றார்.