லாரி மீது பள்ளி வேன் மோதி கோர விபத்து; மாணவ-மாணவியர் 13 பேர் பலி

விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2026-01-19 18:38 IST

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 25க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயணித்தனர்.

இந்நிலையில், வெண்டர்பிஜில்பார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பள்ளி வேன் மோதியது. இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் பயணித்த மாணவ-மாணவியர் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவ-மாணவியர் 11 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்