செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

இஸ்ரேல் , ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.;

Update:2025-10-18 21:34 IST

சனா,

இஸ்ரேல் , ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்தனர்.

மேலும், ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஓமனில் இருந்து செங்கடல் வழியாக கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபூட்டி நாட்டிற்கு சரக்கு கப்பல் இன்று சென்றுகொண்டிருந்தது. கெமரூன் நாட்டை சேர்ந்த அந்த கப்பல் செங்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அதன் மீது ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கப்பலில் பயணித்த மாலுமிகளுக்கு எதேனும் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்