அமெரிக்கா உதவியுடன் ஈராக் படையினர் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தளபதி பலி

அமெரிக்கா உதவியுடன் ஈராக் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்தார்.;

Update:2025-03-14 19:55 IST

பாக்தாத்,

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதுமுதல் உலக அளவில் பயங்கரவாத அமைப்புகள் மீதான தாக்குதல்களை அந்நாட்டு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, சிரியா, சோமாலியா போன்ற நாடுகளில் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து அமெரிக்க படையினர் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து அந்நாட்டு படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். அமெரிக்க படையினரினின் உதவியுடன் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அப்துல் மகி மசூலா அல் ரிபாய் கொல்லப்பட்டார். உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அப்துல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஈராக் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்