உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல்: இந்தியர்களுக்கு இடம் இல்லை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முகம்மது யூனுஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.;
வாஷிங்டன்,
சர்வதேச அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்த கூடியவர்கள், பிரபலங்கள் என டாப் 100 பேரை ஒவ்வொரு ஆண்டும் பிரபல ஆங்கில பத்திரிக்கையான டைம் மேகசின் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 2025 ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் லிஸ்டில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை.
இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முகம்மது யூனுஸ், டெஸ்லா நிறுவன சி இ ஒ எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், பாலிவுட் நடிகர் ஆலியா பட் உள்ளிட்டவர்கள் இடம் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டில் யாரும் இடம் பெறவில்லை.