பவுமாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்: இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் அறிவுரை

கடினமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார்.;

Update:2025-11-19 07:32 IST

கொல்கத்தா,

கொல்கத்தாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோற்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சுழலுக்கு உகந்த வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் சமாளிக்க முடியால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிப்போனார்கள். அதே சமயம் இந்த கடினமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார்.

Advertising
Advertising

இது போன்ற ஆடுகளம் (பிட்ச்) தான் வேண்டும் என்று நாங்கள் கேட்டு பெற்றோம். பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வி ஏற்பட்டதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறினார். பிட்ச் விவகாரத்தில் கம்பீரின் நிலைப்பாட்டை முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, புஜாரா, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் குறை கூறினர்.

இந்த நிலையில் ஆடுகள சர்ச்சையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விவாதத்தை முன் வைத்துள்ளார். அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

தென்ஆப்பிரிக்கா கேப்டன் பவுமாவிடம் இருந்து இந்திய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை விளையாடினார். பொறுமையாக மனஉறுதியுடன் போராடுவது எப்படி என்பதை களத்தில் காட்டினார். இது தான் முறையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய பேட்டிங். ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் போட்டி வித்தியாசமானது என்பதை நமது வீரர்கள் மறந்து விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்குரிய ஷாட்டுகளை ஆடும் போது தான் தாக்குப்பிடிக்க முடியும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்