அவர்களது முயற்சியால் தான் இந்திய அணி விளையாடும் அணுகுமுறையை மேம்படுத்திக் கொண்டது: அஸ்வின்
விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.;
ராஞ்சி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் கடந்த 30ம் தேதி நடைபெற்றது நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், பர்கர், கார்பின் போஷ் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த நிலையில், ரோகித் சர்மா, முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முயற்சியால் தான் இந்திய அணி விளையாடும் அணுகுமுறையை மேம்படுத்திக் கொண்டது என அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கான எல்லா சிறப்பும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரையே சாரும். அவர்கள் இருவரும் எப்படி விளையாட வேண்டும் என்ற புதிய வழிமுறையை காட்டினார்கள். அவர்களது முயற்சியால் ஆக்ரோஷமாக விளையாடும் அணுகுமுறையை இந்திய அணி மேம்படுத்திக் கொண்டுள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவதை பார்த்து நாம் ரசிக்கிறோம். அதனை அவர்கள் தொடர்ச்சியாக செய்ய விட்டு விட வேண்டும்’ என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.