20 ஓவர் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய சுனில் நரைன்
20 ஓவர் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை சுனில் நரைன் பெற்றுள்ளார்.;
சார்ஜா,
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐ.எல்.20 ஓவர் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ளார். இதில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த சார்ஜா வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் கண்ட சுனில் நரைன் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இது ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் கைப்பற்றிய 600-வது (568 ஆட்டம்) விக்கெட் ஆகும்.
இந்த மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் (681), வெஸ்ட் இண்டீசின் வெய்ன் பிராவோ (631) ஏற்கனவே 600-க்கு மேல் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.