டி20 உலகக்கோப்பை: திலக் வர்மா விளையாடுவதில் சந்தேகம்?
திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.;
சென்னை,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்காக 20 அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீரர் திலக் வர்மா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் ,உலகக்கோப்பை தொடரிலும் விளையாடமாட்டார் என கூறப்பட்டது.இருப்பினும் காயம் எலும்பில் ஏற்படவில்லை. ஒரு வாரம் ஓய்வு எடுத்தாலே போதுமானது என திலக் வர்மா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் மாற்று வீரருக்கான ஆலோசனையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.