இலங்கை அணியில் இணையும் இந்திய பயிற்சியாளர்
20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.;
கொழும்பு ,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகி தயராக வருகின்றன.
இந்த நிலையில் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவின் விக்ரம் ரத்தோரை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
விக்ரம் ரத்தோர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியளராக நீண்ட காலம் பணியற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.