அடுத்த மாதம் இந்தியா வரும் ரொனால்டோ

அல் நாசர் - கோவா அணிகளுக்கு இடையேயான போட்டி படோர்டா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.;

Update:2025-09-12 16:21 IST

புதுடெல்லி,

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கிளப் போட்டிகளில் அல் நாசர் (சவுதி அரேபியா ) அணிக்காக விளையாடி வருகிறார் .இந்த நிலையில் ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் (AFC Champions League) போட்டியில் விளையாடுவதற்காக ரொனால்டோ இந்தியா வருகிறார் .குரூப் டி பிரிவில் அல் நாசர் , எப்சி கோவா (இந்தியா) , பெர்சபோலிஸ் (ஈரான்) மற்றும் அல்-துஹைல் (கத்தார்) அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் அல் நாசர் - கோவா அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற அக்டோபர் 22-ந்தேதி கோவாவின் படோர்டா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் , இப்போட்டியில் பங்கேற்க ரொனால்டோ இந்தியாவுக்கு வர உள்ளது. இந்தச் செய்தி இந்திய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்