ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இரட்டையர் பிரிவில் ஹென்றி - ஹாரி ஜோடி சாம்பியன்
இறுதிப்போட்டியில் ஹென்றி பேட்டன்- ஹாரி ஜோடி இங்கிலாந்து இணையுடன் மோதியது.;
image courtesy:twitter/@atptour
துரின்,
இத்தாலியின் துரின் நகரில் நடந்த ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஹென்றி பேட்டன்- பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா ஜோடி, இங்கிலாந்தின் சலிஸ்பரி- ஸ்குப்ஸ்கி இணையுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹென்றி பேட்டன்- பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா இணை 7-5 மற்றும் 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.